[X] Close

அப்ரிடியின் சர்ச்சை ட்விட்: வறுத்து எடுக்கும் கோலி, ரெய்னா, கபில்தேவ்


top-cricketers-lash-out-at-shahid-afridi-for-kashmir-tweet

  • போத்திராஜ்
  • Posted: 04 Apr, 2018 18:35 pm
  • அ+ அ-

இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்திருந்தார்.

அதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, சுரேஷ் ரெய்னா, முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து, பதிலடி கொடுத்துள்ளனர்

காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 12 தீவிரவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, நேற்று ட்விட் செய்திருந்தார்.

அதில், “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.  

இதற்கு மூத்த வீரர் கவுதம் கம்பீர் நேற்றுபதிலடி கொடுத்திருந்தார். அதில் “காஷ்மீர் தொடர்பாக அப்ரிடியின் ட்விட்டுக்கு ஏதாவது பதில்கூறுங்கள் என்று ஊடகங்யிகள் என்னிடம் கேட்கிறார்கள். இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அப்ரிடியின் அதிகாரத்தில் யு.என் என்றால் அன்டர் நைண்டீன் என்று அர்த்தம் புரிந்துள்ளார். இதை ஊடகங்கள் பெரிதாக்க வேண்டாம். அப்ரிடியின் பேச்சு நோபாலில் விக்கெட் விழுந்து மகிழ்வதைப் போன்றது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இது குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், “ஒரு இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்ததோ அது குறித்துச் சொல்லலாம். என்னுடைய நலன்கள் எப்போதும் நாட்டின் நலனை  மையப்படுத்தியே இருக்கும். நாட்டின் நலன்களுக்கு விரோதமான எதையும் நான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துக் கூறக்கூடாது. சிலர்  கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “அப்ரிடிக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். யார் அவர், இது போன்ற நபர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடாது” எனத் தெரிவித்தார்.

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் கூறுகையில், “காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இனிமேலும் அப்படித்தான் இருக்கும். என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்தபகுதி, பிறந்த இடம். ஆதலால், டி, காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத செயல்களை தூண்டிவிடாமல், அத்துமீறி தாக்குதல் நடத்தாமல் இருக்க பாகிஸ்தான் வீரர் அப்ரி தங்கள் நாட்டு ராணுவத்தை கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு தேவை அமைதி. ரத்தம் சிந்துவதும், வன்முறையும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close