இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் லக்சயா


ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்சயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் லக்சயா சென் 21-9, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.