பிரெஞ்சு ஓபன்: அரை இறுதியில் போபண்ணா ஜோடி


பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, பெல்ஜியத்தின் ஜோரன் விலீஜென், சாண்டர் கில் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 7-6(7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.