[X] Close

இந்தக் கட்டத்தில் சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவதா நோ..நோ..: சச்சின் அனைத்து காலத்திலும் கிரேட் - கிளென் மெக்ரா திட்டவட்டம்


glenn-mcgrath-cricket-virat-kohli-sachin-tendulkar

  • முத்துக்குமார்
  • Posted: 09 Jan, 2019 16:09 pm
  • அ+ அ-

விராட் கோலி மிகச்சிறந்த வீரர், அவர் கிரிக்கெட்டை ஆடும் விதம், மைதானத்துக்கு வெளியே மிகவும் எளிமையான அவரது குணம், நடத்தை தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறிய ஆஸி. கிரேட் பவுலர் கிளென் மெக்ரா, சச்சினுடன் ஒப்பிடுவது பற்றி நோ.. நோ என்றார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

விராட் கோலி அன்று தன் கிளவ், கால்காப்பு, பேட், கிரிப் என்று பிங்க் நிறத்தை அதில் காட்டி புற்றுநோய் விழிப்புணர்வுக்கு தன்னுடைய பங்களிப்பை வெளிப்படையாக அவர் அறிவித்தது என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது.  மிகவிம் சிறப்பு வாய்ந்த செய்கை, பாராட்டத்தக்க செய்கை. 

விராட் கோலி ஆட்டத்தை ஆடும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் களத்தில் ஆக்ரோஷமாக ஆடுகிறார், ஆனால் களத்துக்கு வெளியே மிகவும் நல்ல பண்புள்ள மனிதராக இருக்கிறார். 

விராட்டின் பணிவு, உண்மையில் அவர் களத்த்துக்கு வெளியே எளிமையான, சாதாரண ஒரு நபர் போலத்தான் நடந்து கொள்கிறார். எனக்கு அவர் மீது நிரம்ப மரியாதை உள்ளது. 

என்னுடன் அவர் பேசிய போது, நட்புடன் பழகினார், மரியாதை கொடுக்கும் மனிதராக திகழ்ந்தார், களத்துக்கும் உள்ளும் புறமும் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர். கிரிக்கெட்டை பற்றுதலுடன் ஆடுகிறார், இந்தத் தொடரில் அணியை நன்றாக வழிநடத்தினார். 

இப்போதைக்கு அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். களத்தில் தன் தரத்தை நிரூபிக்கிறார். நல்ல பேட்டிங் உத்தி, நல்ல பொறுமை, தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுகிறார், இவையெல்லாம் கிரேட் பேட்ஸ்மெனுக்கான தரமாகும். 

கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்கின்றனர் என்றால் அவரை மதிக்கிறார்கள் என்று அர்த்தம், ஆஸி.ரசிகர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை ஏற்படுத்துகின்றனர் என்றால் அவர்கள் உங்களை அந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று பொருள். கோலிக்கு ஆஸி.ரசிகர்களிடையே நல்ல மரியாதை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். 

சச்சினையும் விராட் கோலியையும் இப்போதைக்கு ஒப்பிடக் கூடாது, ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் அனைத்து காலத்திற்குமான கிரேட் பிளேயர், 200 டெஸ்ட்கள், ஏகப்பட்ட ரன்கள் என்று சச்சின் சாதனைகள் வேறு. இப்போதைக்கு விராட், சச்சினை ஒப்பிடச் சொன்னால், விராட் இன்னும் சச்சின் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும். 

ஆனால் விராட் சச்சினின் இடத்துக்கு உயர வாய்ப்புள்ளது, சதங்களை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். அந்தப் பாதையில் தான் செல்கிறார். 

சச்சின் வேறு, கோலி வேறு:

சச்சின் அமைதியானவர், மென்மையாகப் பேசுபவர்,  விராட் கோலி கொஞ்சம் ஆவேசமானவர். 

உத்தி ரீதியாக சச்சினிடம் பிரச்சினைகள் இல்லை. விராட் கோலியின் உத்தியிலும் குறைபாடு இல்லை, சில வேளைகளில் வைடாகச் செல்லும் பந்துகளை விரட்டுகிறார். சில வேளைகளில் கோலியைப் பொறி வைத்து பிடிக்க முடியும். ஆனாலும் கோலி ஆதிக்கம் செலுத்தும் திறமை உடையவரே. 

சச்சின் தன் பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர், சிட்னியில் அவர் ஒரு இன்னிங்ஸில் ஒரு கவர் ட்ரைவ் கூட வேண்டுமென்றே ஆடக்கூடாது என்று ஆடாமல் இருந்து இரட்டைச் சதம் அடித்தார். இதுதான் சிறப்பான பேட்ஸ்மேனின் ஓர் அங்கமாகும், விராட் கோலி சச்சினிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close