[X] Close

நம்பர் 1 இந்திய அணியிலிருந்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ சிறந்த டெஸ்ட் அணியில் விராட் கோலிக்கு மட்டுமே இடம்: ஒருநாள், டி20 அணி வீரர்கள் விவரம்


espn-cricket

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 20:00 pm
  • அ+ அ-

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கிரிக்கெட் இணையதளம் 2018ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் அணி, டி20 அணிகளை அறிவித்துள்ளது, இதில் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்திய அணியிலிருந்து விராட் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்குக் கேப்டன் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். ஒருநாள் அணிக்கு விராட் கோலி கேப்டன்.

ஆனால் நம்பர் 8-ல் உள்ள மே.இ.தீவுகளிலிருந்து ஜேசன் ஹோல்டர், வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்ரியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று அந்த இணையதளமே தன் தேர்வு குறித்துக் கூறியுள்ளது. சாதனை படைத்த இந்திய வேகப்பந்து கூட்டணியில் ஒருவரும் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

2018 டெஸ்ட் அணி:

 திமுத் கருணரத்னே (743 ரன்கள்), டாம் லேதம் (658 ரன்கள்), கேன் வில்லியம்சன் (கேப்டன், 651 ரன்கள்), விராட் கோலி (1322 ரன்கள்), ஹென்றி நிகோல்ஸ் (658 ரன்கள்),  ஜோஸ் பட்லர் (வி.கீ. 760 ரன்கள்),  ஜேசன் ஹோல்டர் (336 ரன்கள், 33 விக்கெட்டுகள்), ஷனன் கேப்ரியல் (37 விக்கெட்டுகள்),  கேகிசோ ரபாடா (52 விக்கெட்டுகள்), மொகமது அப்பாஸ் (38 விக்கெட்டுகள்), நேதன் லயன் (49 விக்கெட்டுகள்)

2018 ஒருநாள் அணி:

 ரோஹித் சர்மா (1030 ரன்கள்), ஜானி பேர்ஸ்டோ ( 1025 ரன்கள்),  விராட் கோலி (கேப்டன், 1202 ரன்கள், சராசரி 133.55), ராஸ் டெய்லர் (639 ரன்கள்),  ஷேய் ஹோப் (875 ரன்கள்),  ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ரஷீத் கான், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜஸ்பிரித் பும்ரா.

2018-ன் டி20 அணி:

 ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கொலின் மன்ரோ, பாபர் ஆஸம், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜோ டென்லி, ஆந்த்ரே ரஸல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரூ டை, ஜோப்ரா ஆர்ச்சர்,  ரஷீத் கான்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close