[X] Close

பெர்த்தில் கோலிக்கு மோசடி கேட்ச் பிடித்த ஹேண்ட்ஸ்கம்ப் நீக்கம்? - ஆஸி. அணியில் முக்கிய மாற்றம்


melbourne-test-2018

  • முத்துக்குமார்
  • Posted: 24 Dec, 2018 21:32 pm
  • அ+ அ-

மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் உறுதி தெரிவித்துள்ளன.

ஹேண்ட்ஸ்கம்ப்புக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை அணியில் கொண்டு வர ஆஸ்திரேலியா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 326 ரன்களை நோக்கி அச்சுறுத்தலாகச் சென்று கொண்டிருந்த விராட் கோலிக்கு தரையில் பட்டு கேட்ச் எடுத்து விட்டு கேட்சை பிடித்து விட்டதாக மோசடி செய்து இந்திய தோல்விக்கு பெரும்பங்கு காரணமாக அமைந்த ஹேண்ட்ஸ்கம்ப் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு வழிவிடுகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

“துல்லியமாக பேலன்ஸ் உள்ள அணி வேண்டுமெனில் சில ஓவர்களை வீசக்கூடிய திறமை உடைய வீரர் தேவை. ஆகவே மெல்போர்ன் பிட்சில், கொஞ்சம் ஈரப்பதம், புற்கள் இருந்தாலும் எங்களுக்குத் தெரிந்த மெல்போர்ன் பிட்சில் மிட்செல் மார்ஷ் தேவை அதிகமாக உள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விட குறைந்த ஓவர்களையே வீசியுள்ளார்கள், இது நம் அதிர்ஷ்டம்.  அங்கு குறிப்பாக பும்ரா அதிக ஓவர்களை வீசுகிறார்.

மேலும் மிட்செல் மார்ஷ் ஸ்பின்னையும் நன்றாக ஆடுகிறார், பேட்டிங்கில் அவர் ஆஸ்திரேலியாவில் நன்றாகவே ஆடுகிறார்.

நேதன் லயன் உண்மையில் உலகத்தரமாக வீசுகிறார். மற்ற மூவரும் நல்ல அறிகுறிகளைக் காட்டியுள்ளனர்.  இந்த மூவரும் மோசமாக வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்திய காலக்கட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் ஒரு அணியாக திரண்டு வீசும்போது... நான் ஆவலுடன் இருக்கிறேன்” என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close