ஒலிம்பிக் போட்டிக்கு அமித் பங்கால் தகுதி


புதுடெல்லி: பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடைபெற்ற 51-வது கிலோ பிரிவிலான 2-வது உலக தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற அமித் பங்கால், சீன வீரர் சுவாங் லியுவை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.