[X] Close

நான் விரும்பும் விளையாட்டை கறையாக்கிவிட்டேன் - டேவிட் வார்னர் மன்னிப்பு


ball-tampering-warner-apology

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 29 Mar, 2018 12:26 pm
  • அ+ அ-

பால் டேம்பரிங்க் விவகாரத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த சர்ச்சையில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஒரு சிறுவனாக தான் விரும்பிய ஒரு விளையாட்டை கறையாக்கிவ்ட்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்க்ராஃப்ட், பந்தை, பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்ற, விதிமுறைகளை மீறி சேதப்படுத்தினார். தொலைக்காட்சி கேமராவில் அவர் பந்தை சேதப்படுத்தியது அப்பட்டமாக தெரியவர, விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணைத் தலைவர் டேவிட் வார்னர், இளம் வீரர் பேன்க்ராஃப்ட் ஆகியோர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

இந்த பந்து சேத சர்ச்சையில் டேவிட் வார்னரே முக்கியக் காரணியாக இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்தும் இருவரும் தடை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார். 

"ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் வில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு: நான் இப்போது சிட்னி திரும்பிக் கொண்டிருக்கிறேன். செய்த தவறுகள் கிரிக்கெட்டை பாதித்துள்ளது. இதில் எனது பங்குக்கு நான் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருகிறேன். 

இது விளையாட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும் எந்த விதமான வருத்தத்தைக் கொடுத்திருக்கும் என்பது எனக்குப் புரிகிறது. சிறுவயதிலிருந்து நான் விரும்பிய, நாம் அனைவரும் விரும்பும் விளையாட்டை நான் கறையாக்கிவிட்டேன். 
நான் இந்தத் தருணத்தில் ஆழமாக சிந்தித்து, எனது குடும்பத்தினருடன், நண்பர்களுடன், நல விரும்பிகளுடன் நேரம் செலவு செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் மீண்டும் உங்களிடம் பேசுகிறேன்" என்று வார்னர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய கேப்டனாக வாய்ப்புகள் உள்ளன ஆனால் டேவிட் வார்னர் இனி தலைமை பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

-பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close