[X] Close

இது ‘ஜென்டில்மேன் கிரிக்கெட்’- 3-வது நடுவர் அவுட் கொடுத்து வெளியேறிய வீரரை பேட்டிங் செய்யக் கோரிய பீல்டிங் அணி


third-umpire-drama-strikes-at-gabba

மூன்றாவது நடுவர் ரன் அவுட்டை ஆய்வு செய்த காட்சி

  • போத்திராஜ்
  • Posted: 20 Dec, 2018 12:56 pm
  • அ+ அ-

காபா,

ஜென்டில்மேன்ஸ் கேம் என்று கிரிக்கெட்டை கூறுவார்கள். கிரிக்கெட்டில் ஒருசில நேர்மையான சம்பவங்களால்தான் இன்னும் அந்தப் பெயர் மறையாமல் இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் காபா நகரில் நடந்த பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் 3-வது நடுவர் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்த நிலையிலும், பீல்டிங் செய்த அணியினர் பேட்ஸ்மேனை மீண்டும் பேட்டிங் செய்யக் கோரி அழைத்து பேட் செய்யவைத்தது வியப்படைய வைத்து.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு கிறிஸ் லின்னும், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்குக் கோலின் இங்கிராமும் கேப்டனாக இருந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பிரி்ஸ்பேன் ஹீட் அணி 19.4 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 147ரன்கள் இலக்காக வைத்து பேட் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

இந்தப்போட்டியில் நடந்த வித்தியாசமான நிகழ்வினால்தான் ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற அடைமொழி கிரிக்கெட் விளையாட்டுக்கு இன்னும் மறையாமல் இருக்கிறது.

பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் வீசினார். பட்டின்ஸன், பியர்ஸன் களத்தில் இருந்தனர். ரஷித்கான் பந்துவீச்சை பியர்ஸன் எதிர்கொண்டார். ஸ்லிப்திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார். மறுபுறம் பட்டின்ஸன் எல்லைக் கோட்டுக்கு செல்லும்போது பென் லாலினால் ரன் அவுட் செய்து நடுவரிடம்முறையீடு செய்தார். கள நடுவர் இருவரும் மூன்றாவு நடுவர் முடிவுக்கு அனுப்பிவைத்தனர்.

மூன்றாவது நடுவராக இருந்த டேவிட்ஸன் பலமுறை ரன் அவுட்டை பல கோணங்களில் பார்த்தார். இறுதியில் ரன் அவுட் இல்லை என்பது திரையில் பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் டேவிட்ஸன் அவுட் அளித்துச் சிவப்பு விளக்கை எரியவிட்டார்.

இதைப்பார்த்த களநடுவர்கள் சிமன் பிரை, பால் வில்ஸன் ஆகியோர் திகைத்துப்போனார்கள். பேட்ஸ்மேன் பட்டின்ஸ், இரு அணிகளின் கேப்டன்களான கிறிஸ் லின், இங்கிராமும் திகைத்தனர்.

இந்த ரன் அவுட் அவுட் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், மூன்றாவது நடுவர் அவுட் அளித்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிதுநேரம் களத்தில் இருந்த பட்டின்ஸன் வேறுவழியின்றி, பெவிலியனுக்குத் திரும்பினார்.

ஆனால், அவுட் இல்லாததற்கு அவுட் அளித்த 3-வது நடுவரின் முடிவை ஏற்க அடிலெய்ட் ஹீட்டர்ஸ் கேப்டன் இங்கிராம் ஏற்கவில்லை. மாறாக, ரன் அவுட் செய்த சக வீரர் பென் லாலினை அழைத்து தனது 'அப்பீலை' திரும்பப் பெறுமாறு கூறினார். அவரும் தனது 'அப்பீலை' திருப்பப் பெற்றுக்கொண்டதையடுத்து, பெவிலியனுக்குச் சென்ற பிரிஸ்பேன் ஹீட் அணியின் பேட்ஸ்மேன் பட்டின்ஸை மீண்டும் அழைத்து பேட் செய்ய வைத்தனர்.

இந்தச் சம்பவம் அங்கிருந்த ரசிகர்ளை பெரும் உணர்ச்சிவசப்படுத்தியது. அனைவரும் இங்கிராமின் கேப்டன்ஷிப்பை பாராட்டினார்.

இது குறித்து வர்ணனையாளர் கில் கிறிஸ்ட் கூறுகையில், “ மூன்றாவது நடுவரின் முடிவு தவறானது என அனைவருக்கும் தெரியும். ஆனால், நேர்மை கடைப்பிடிக்க மீண்டும் பட்டின்ஸனை அழைத்து பேட்டிங் செய்யவைத்த இங்கிராமின் செயல் பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்தார்.

ரன்அவுட் செய்த பென் லாலின் கூறுகையில், “ பட்டின்ஸன் அவுட் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், 3வது நடுவர் ஏன் அவுட் அளித்தார் எனத் தெரியவில்லை. இருந்தாலும் கிரிக்கெட்டில் அடிப்படை நேர்மையைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், பட்டின்ஸனை திரும்ப அழைக்க முடிவு செய்தோம். அதனால் 'அப்பீலை' திரும்பப் பெற்றோம்.” எனத் தெரிவித்தார்.

கேப்டன் இங்ராம் கூறுகையில், “ கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. இதனால், 5 நிமிடங்கள் போட்டியில் தாமதம் ஏற்பட்டாலும், பட்டின்ஸனை திரும்ப அழைத்து ஜென்டின்மேன் கேம் பெயரை காப்பாற்றி இருக்கிறோம். இதுதான் நல்ல வீரருக்கு அழகு” எனத் தெரிவித்தார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close