[X] Close

விராட் கோலியின் சாதனைகள்


virat-kohli-record

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 10:35 am
  • அ+ அ-

பெர்த் டெஸ்டில் அபாரமாக விளையாடி விராட் கோலி சதம் அடித்தார். இது அவரது 25-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் விரைவாக 25 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவர் 127-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 68 இன்னிங்ஸில் 25 சதங்கள் அடித்து சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 130 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அடித்துள்ள 6-வது சதம் இதுவாகும். இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸி. மண்ணில் 6 சதங்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை தற்போது விராட் கோலி சமன் செய்துள்ளார். மேலும் பெர்த் புதிய மைதானத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1000 ஆயிரம் ரன்களை குவித்த 3-வது இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் 2002-ம் ஆண்டு ராகுல் திராவிட் 1,137 ரன்களும், 1983-ம் ஆண்டு மொகீந்தர் அமர்நாத் 1,065 ரன்களும் குவித்திருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close