சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து தோல்வி


சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வி அடைந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்பெயினின்கரோலினா மரினை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 11-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் உலகின் 2-ம் நிலை ஜோடியான தென் கொரியாவின் பேக் ஹா நா, லீ சோ ஹீயை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.