[X] Close

காமென்வெல்த் போட்டியில் பங்கேற்கும் பி.வி.சிந்துவுக்கு புதிய கவுரவம்


pv-sindhu-to-be-india-s-flag-bearer

  • போத்திராஜ்
  • Posted: 24 Mar, 2018 19:51 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் அடுத்தமாதம் நடக்கும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி முதலில் அணிவகுத்துச் செல்லும் பெருமை பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கிடைத்துள்ளது.

1-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது.

இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். கடந்த 2014ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியின் அணி வகுப்புக்கு தலைமை ஏற்று துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் சென்றார், 2008-ம் ஆண்டு அபினவ் பிந்த்ராவும், 2006ம் ஆண்டு, ராஜ்யவர்த்தன் ரத்தோரும் அணிவகுத்தனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிந்து, வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் சமீபகாலமாக பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆதலால், அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்த முறை காமென்வெல்த் போட்டியில் தேசியக்கொடியைப் பிடித்து இந்திய அணியை அணிவகுத்து அழைத்துச்செல்லும் பெருமை பி.வி.சிந்துவுக்கு கிடைத்துள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close