ஆசிய விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நங்கையர்கள்!


காமன்வெல்த் போட்டிகள், உலகக் கோப்பை கால்பந்து இவைகளைத் தொடர்ந்து விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காத்திருக்கின்றன. இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18 முதல் இப்போட்டிகள் தொடங்கவுள்ளன.

ஆசிய நாடுகள் நடத்தும் இந்த பலப்பரீட்சையில், தனது வலுவைக் காட்ட 36 பிரிவுகளில் 524 பேரைக்கொண்ட பெரும் படையை இந்தியா அனுப்புகிறது. இதில் 247 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பல பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ள வீராங்கனைகளின் படை, இம்முறையும் போட்டிக்குத் தயாராக முந்தி நிற்கிறது. பி.வி.சிந்து, தீபா கர்மகார், சாய்னா நெவால், டிண்டு லுகா, மீராபாய் சானு, ஹீனா சித்து என நாடறிந்த வீராங்கனைகளுடன் வெளியில் அதிகம் தெரிந்திராத இன்னும் சில நட்சத்திரங்களும் பதக்கப் போரில் குதிக்கவுள்ளனர். பதக்கம் வெல்லும் லட்சியத்துடன் புறப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

சாதனை வேகத்தில் டூட்டி சந்த்

ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்தின் பாட்மின்டன் அகாடமி, வழக்க மாக பாட்மின்டன் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்தான் பயிற்சி அளிக்கும். இதற்கு விதிவிலக்காகக் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு இலவசமாகத் தங்கி பயிற்சி பெற்று வருகிறார் தடகள வீராங்கனை டூட்டி சந்த். தகுதியானவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் கோபிசந்த் என்றும் சறுக்கியதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11.29 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் டூட்டி சந்த். இதே வேகத்தில் ஓடினால் ஆசியப் போட்டியில் தங்கம் நிச்சயம் என்பதால், ஆசிய விளையாட்டுக் களத்தில் டூட்டியின் ஓட்டத்தை அவலோடு எதிர்பார்க்கிறது இந்தியா. இப்போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களுக்குத் தகுதி பெற்றுள்ள 
டூட்டி, இரண்டிலும் தங்கம் வெல்வர் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

x