ஆக.22-ல் யுடிடி தொடர் சென்னையில் தொடக்கம்


சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் (யுடிடி) வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சீசனில் புதிதாக அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் களமிறங்க உள்ளன. இவற்றுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வெல்ல மோதுகின்றன.