காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு: ஆந்திராவை சேர்ந்த கணேஷ் சர்மா டிராவிட் பொறுப்பேற்கிறார்!


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளையமடாதிபதி கணேஷ் சர்மா டிராவிட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்த மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகரில் பிரிசித்தி பெற்ற சங்கர மடம் உள்ளது. இந்த மடத்தின் 70-வது மடாபதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமாதி அடைந்ததைத் தொடர்ந்து இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் இளைய மடாதிபதி தேர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளையமடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் சர்மா டிராவிட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுள்ளார். வரும் 30-ம் தேதி அட்சதிருதியை தினத்தன்று இவருக்கு சந்நியாச தீட்சையை சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்குகிறார்.

இளைய மடாதிபதியாக பொறுப்பேற்க உள்ள கணேஷ் சர்மா டிராவிட் ரிக், யஜூர் சாம வேதங்களை பயின்றவர். இளையமடாதிபதியாக பொறுப்பேற்கும் கணேஷ் சர்மா டிராவிட் வரும் மே 2-ம் தேதி நடைபெறும் ஆதிசங்கரர் ஜெயந்தியில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் இணைந்து பங்கேற்கிறார்.

x