சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு கூழமந்தலில் ஆகர்ஷண ஹோமம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூழமந்தல் அருகேநட்சத்திர விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்தவிழாவையொட்டி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஆகர்ஷண ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். அங்கு ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் மரங்களும், தனிச் சந்நிதிகளும் உள்ளன. அவை அனைத்துக்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டன.