[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் – (8.11.18 முதல் 14.11.18 வரை) மேஷம் முதல் கன்னி வரை


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 18:14 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் லாபத்துடன் கூடிய காலகட்டமாகும். ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் மிகவும் பலத்துடன் காணப்படுகிறார். பணவரவு அதிகமாகிப் பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சின்னச் சின்ன விஷயங்களிலும் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பயணம் செல்லலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்களுக்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, தேவையான  பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, சக மாணவர்களின் கருத்துகளுக்கு மாற்றான கருத்து களைக் கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: சிவப்பு, வெள்ளை l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ராசிநாதன் சுக்கிரன் மறைந் திருந்தாலும் ஏனைய கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக உள்ளது. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் பலனளிக்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. குருவின் பார்வையால் அனைத்துத் தடைகளும் அகலும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகலாம். ஊழியர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். குடும்பச்சூழலில் மனநிறைவு காணப்படும். விருந்தினர் வருகை இருக்கும். கலைத் துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்களுக்கு, கடின முயற்சியினால் காரியங்கள் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடக்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l எண்கள்: 2, 6, 9 l பரிகாரம்: வெள்ளிக்கிழமை குலதெய்வத்துக்குத் தீபமேற்றி வணங்கப் பொருளாதாரச் சிக்கல் தீரும்.

 

மிதுன ராசி வாசகர்களே

 

இந்த வாரம் உழைப்பு அதிகரிக்கும். ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் குரு சாரம் பெற்றிருப்பது நல்ல பலன்களைத் தரும். குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் இடத்தை அதன் அதிபதி குருவே பார்ப்பதால் வியாபார முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகலாம். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். உறவினர், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, குழப்பங்கள் நீங்கும். கலைத் துறையினருக்கு, காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு, முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி l திசைகள்: வடக்கு, மேற்கு l நிறங்கள்: வெள்ளை, பச்சை l எண்கள்: 2, 5, 6 l பரிகாரம்: புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் குறையும். எந்த வேலையைச் செய்து முடிப்பதிலும் தடை, தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மனதிருப்தி உண்டாகும். வியாபாரம் தொடர்பாகத் திடீர் முதலீடுச் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. மேலிடத்தில் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கலைத் துறையினருக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடம் தொடர்பாகக் குறை ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களைச் சந்தேகம் நீக்கித் தெளிவாகப் படிப்பது நல்லது. உற்சாகம் உண்டாகும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடக்கு l நிறங்கள்: வெள்ளை, நீலம் l எண்கள்: 2, 6, 9 l பரிகாரம்: திங்கள்கிழமை அம்பாளை வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் சூரியன் தைரிய ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவர் குருசாரம் பெற்று சஞ்சாரம் செய்வது அனுகூலத்தைக் கொடுக்கும். வேகத்தை விட்டு விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்கலாம். மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு, விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத் துறையினருக்கு, நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: சிவன் கோயி லுக்குப் போய் சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் முன்னேற்றம் காண்பீர்கள். ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்தில் இருந்தாலும் அவர் குருசாரம் பெற்றிருப்பது நன்மையைக் கொடுக்கும். எதிர்ப்புகள் அகலும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியம் சுபமாகும். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். காரியத்தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பெண்களுக்கு, எதிர்ப்புகள் விலகும். கலைத் துறையினருக்கு, பேச்சுத் திறமையால் காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு, போட்டிகள் குறையும். எதிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: பச்சை, வெள்ளை l எண்கள்: 5, 6 l பரிகாரம்: புதன்கிழமை ஆஞ்சனேயரை வெண்ணெய் சாத்தி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close