[X] Close

பங்குனிச் செவ்வாயில் அம்பாள்... மறக்காம தரிசனம் பண்ணுங்க!  


panguni-sevvai-ambal

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Mar, 2018 12:41 pm
  • அ+ அ-

பங்குனி மாத செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லவும் அம்பிகையைத் தரிசிக்கவும் மறக்காதீர்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் தேவி.

பங்குனி மாதம் என்பது மிகவும் உன்னதமான மாதம். மேலும் நான்கு நவராத்திரிகளில் ஒன்றான வசந்த நவராத்திரி என்பது, 18ம் தேதி தொடங்கி ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு விமரிசையாக பூஜைகளும் அலங்காரங்களும் விமரிசையாக நடைபெற்று வரும் காலம் இது.

இந்த நாளில், தினமும் அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது ரொம்பவே விசேஷம். குறிப்பாக, பங்குனிச் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மறக்காமல், அம்மனைத் தரிசியுங்கள். செவ்வரளி மலர்கள் சூட்டுங்கள்.

வீட்டில், அம்மன் திருவுருவம் கொண்ட படங்களுக்கு செந்நிற மலர்களைச் சூட்டி வழிபடுங்கள். அபிராமி அந்தாதி, செளந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் அம்பாளின் சக்தியானது சூட்சும வடிவில் வியாபித்திருக்கும் என்பது ஐதீகம்.

தீய சக்திகள் வீட்டில் அண்டாமல் பார்த்துக் கொள்வாள் அன்னை. எதிர்ப்புகளை விலக்குவாள்; எதிரிகளை விரட்டுவாள் தேவி என்று சொல்லி சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

முடிந்தால், பங்குனிச் செவ்வாய் வழிபாட்டின் போது, வீட்டில் சர்க்கரைப் பொங்கலோ கேசரியோ நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிமையாக்கித் தந்தருள்வாள் மகாசக்தி!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close