அப்பனே முருகா... அவசரமா 6 லட்சம் ரூபாய் தேவைப்படுது... மனமுருகி கடிதம் எழுதிய பக்தர்!


கோப்புப்படம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர், முருகனிடம் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.6 லட்சம் வரையில் கேட்டு எழுதிய கடிதங்கள், உண்டியலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதம் தோறும் உண்டியல் என்னும் பணி நடைபெறும். அதேபோல் கோயிலில் உள்ள 40 உண்டியல்களும் திறக்கப்பட்டு இன்று எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள், காசுகள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை எண்ணப்பட்டன. இதற்கு நடுவே மூன்று சிறிய பேப்பர்களும் கிடைத்தன. அதில், ஒரு பேப்பரில், "ஓம் கந்தா.. கடம்பா இன்று எனக்கு ரூ 20,000 வேண்டும்.. விரைவாக தருக.." என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

அதேபோல், இரண்டாவது பேப்பரில், "ஓம் முருகா துணை.. இன்று எனக்கு ரூ 30,000 வேண்டும்.. விரைவாக தருக.. ஜிஜி ரன்.." என சிவப்பு மையில் எழுதப்பட்டு இருந்தது. மூன்றாவது பேப்பரில் ஓம் சண்முகா.. வெற்றி வேலா.. எனக்கு ரூ 6,00,000 லட்சம் விரைவாக வேண்டும்.. கந்தா கடம்பா கார்த்திகேயா.. எனக்கு 6,00,000 லட்சத்தை ஏதாவது ஒரு வகையில் தருக தருக.. நன்றி இப்படிக்கு ஜிஜி ரன்.. என்று எழுதப்பட்டிருந்தது. இந்த மூன்று பேப்பர்களும் ஒரே நபர் எழுதியதாக தெரிகிறது.

முருகனுக்கு கடிதம் எழுதிய பக்தர்கள்

'மாயி' படத்தில் வரும் வடிவேல் காமெடி போல, யாருகிட்ட கேட்கிற.. அண்ணன்கிட்ட தான கேளு.. என்று என்கிற வகையில் முருகனிடம், முதலில் 20 ஆயிரம் கேட்ட பக்தர், கொஞ்சம் கொஞ்சமா ரூ.30 ஆயிரம், 6 லட்சம் என்று பேப்பரில் எழுதி குசும்புகார பக்தர்கள் கேட்டுள்ளார்.

இந்த மூன்று கடிதங்களையும் அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் பார்த்து வயிறு குலுங்க சிரித்தனர். பாவம் அந்த 'ஜிஜி ரன்' னுக்கு என்ன கஷ்டமோ, ஆறு லட்ச ரூபா கேட்டு இருக்காரு.. முருகன் கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் உதவி செய்வார் என்று நம்புவோம்.

இதையும் வாசிக்கலாமே...

x