இறைவனிடம் கையேந்துங்கள்... மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை


மழை வேண்டி கோவையில் இசுலாமியர்கள் சிறப்பு தொழுகை

கோடை வெப்பம் தணியவும், மழை வேண்டியும் கோவையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இந்த கடுமையான கோடை வெயிலுக்கு நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களும் தப்பவில்லை. 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தொடும் மாவட்டங்களில் கோவையும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

மழை வேண்டி கோவையில் இசுலாமியர்கள் சிறப்பு தொழுகை

தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கோடை வெயிலை எதிர்கொள்ள ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி அத்தியாவசிய தேவைகள் இன்ன்றி வெளியில் வருவதையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதுவரை வெயிலை எதிர்கொண்டு ஆக வேண்டிய நிலையில் மக்கள் இருந்து வருகின்றனர்.

மழை வேண்டி தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார சபை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இன்றைய தினம் சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து இறைவனை வழிபட்டனர். மௌலவி யூனுஸ் ஃபிர்தெளசி இந்த சிறப்பு தொழுகையை நடத்தினார். மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்ட பின்னர், அதில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!

x