சித்திரை திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் நடந்த சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில், தேர் சக்கரம் 10 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம், இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி தேரில் காட்சியளித்தனர். இந்தத் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேராக விளங்குகிறது. இது அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடையிலுள்ளது. இந்தத் தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளது.
தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலமுமாக, 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை தேரின் வடம் பிடித்து இழுத்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேர்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டு, சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். இந்நிலையில், சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் தேர் காலை 10 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்த குடிநீர் தொட்டி பகுதி திடீரென 10 அடி ஆழத்தில் உள்வாங்கியது.
தேரின் முன்புறத்தின் இடது புற சக்கரம் அந்த 10 அடி பள்ளத்தில் சிக்கியது. இதனால் தேர் தெற்கு புறமாக சாய்வதற்கு வாய்ப்புள்ளதால், உடனடியாக ராட்சத இயந்திரம் மூலம் அந்த சக்கரம் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தேரோட்டும் கொத்தனார்கள், ஜாக்கி போன்ற இயந்திரங்களால் சக்கரத்தை தூக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போதிய திறன் இல்லாததால், ராட்சத ஜாக்கி கொண்டு வரப்பட்டு, அந்தப் பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை நிரப்பி, சக்கரத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?
பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!
“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!
நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!
பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!