இன்று முதல் பழநி கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்ல தடை!


இன்று அக்.1ம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஒரு செல்போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி, தரிசனம் முடித்ததும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறத்தது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பழனி கோயில் மலை மீது இன்று அக்.1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வருகிறது. எனவே பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பழநி தண்டாயுதபாணி கோயில்

அப்படி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவில் நுழைவாயிலில் பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் முடிந்து பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x