ஆச்சரியம்! அயோத்தி ராமர் கோயிலுக்கு யாசகர்கள் ரூ.4.5 லட்சம் நன்கொடை!


அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கு அந்தப் பகுதியில் உள்ள யாசகர்கள் ஒன்றிணைந்து 4.5 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ள விவரம் தேசம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அயோத்தி

ராமர் கோயில் கட்டுவதற்கு இந்தியா முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், மடாதிபதிகள், பொதுமக்கள் பலரும் தங்கள் பங்களிப்பை முன்வந்து அளித்துள்ளனர். பலரும் அளித்த நன்கொடையால் இந்த கோயில் வெகு சிறப்பாகவும், பிரமாண்டமான முறையிலும் கட்டி முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ ராம் மந்திர் தீர்த்த அறக்கட்டளைக்காக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் ஏற்பாடு செய்த நிதி பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட யாசகர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்குள் நிதி சேர்த்து கோயில் திருப்பணிக்கு நன்கொடையாக 4.5 லட்சம் ரூபாயை அறக்கட்டளையிடம் வழங்கியுள்ளார்கள்.

அயோத்தி

கோயில் திருப்பணிக்கு ஒரு சிலர் கோடிக்கணக்கில் ரூபாய்களை தந்துள்ள நிலையில் யாசகர்கள் தாங்கள் யாசகம் எடுத்து சேர்த்த பணத்தில் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக கும்பாபிஷேக விழாவிற்கு இவர்களில் இருந்து பிரதிநிதிகள் சிலர் அழைக்கப்பட உள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலுக்காக யாசகர்கள் ஒன்றிணைந்து 4.5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x