அபுதாபி நகரில் கட்டப்பட்டு வரும் பாப்ஸ் இந்து கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் திறப்புவிழா 2024 பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமுமான அபுதாபியில் மிகப்பெரிதாக இந்துக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அபு முரேகா என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலை கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் மொஹம்மத் சயீத் நன்கொடையாக அளித்துள்ளார். இதற்கான இளஞ்சிவப்பு மணற்கற்களும், பளிங்கு கற்களும், மற்ற சில கட்டுமான பொருட்களும் சுமார் 2,000 கைவினைக் கலைஞர்களை கொண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது.

இந்த கோயிலில் இந்து மத கடவுள்களின் சிலைகள் மட்டுமின்றி, பார்வையாளர் அறை, வழிபாட்டு கூடம், கண்காட்சிகள், கற்றல் வசதிகள், விளையாட்டு பகுதி, பூங்கா, சைவ உணவகங்கள் மற்றும் சில கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் பிப்.14ல் கோயில் திறப்புவிழா நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் டெல்லியில் நேரில் வழங்கினர். இதன் மூலம் கோயில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
'கேப்டன்' பெயர் விஜயகாந்திற்குப் பொருத்தமானது... நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!