மகாளய பட்சம்: இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!


பித்ரு கடன்

மாதந்தோறும் அமாவாசையன்று மூதாதையர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்கள், பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இன்று முதல் அடுத்து வரும் 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க. புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு முந்தைய இந்த பதினைந்து நாட்களும் நம் முன்னோர்களுக்கானவை. இந்த பதினைந்து நாட்களும், இறந்துவிட்ட நம் மூதாதையர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவார்கள் என்றும் அப்படி வருபவர்கள் நம் வீட்டைப் பார்ப்பார்கள் என்பதும் ஐதீகம்.

இந்த 15 நாட்களை மகாளயபட்ச நாட்கள் என்கிறோம். சமஸ்கிருதத்தில் பட்சம் என்றால் பதினைந்து. மகாளயம் என்றால், மகத்துவமான. இந்த 15 நாட்கள் முன்னோர்களுக்கான மகத்துவமான நாட்கள் என்பது பொருள். அப்படியான மகாளயபட்சம் இன்று துவங்குகிறது. இது வரை மூதாதையர்களை வணங்காதவர்கள் இன்று முதல் தினமும் பித்ருக்களை வணங்கி ஆராதிக்கலாம். இந்த 15 நாட்களும் தொடர்ந்து பித்ருக்களுக்கு உரிய ஆராதனைகளைச் செய்பவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் முன்னோர்களின் ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும்.

மகாளயபட்ச புண்ணிய காலத்தில் நம் வீட்டுக்கு வரும் முன்னோர்கள், நாம் அவர்களுக்குச் செய்யும் பூஜை, தர்ப்பணம் முதலான வழிபாடுகளைப் பார்ப்பார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் நம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் பெயர்களைச் சொல்லி, கோத்திரம் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். அந்த எள், அவர்களுக்கு உணவாகவும், தண்ணீர் அவர்களின் தாகத்தைத் தணிக்கவும் உதவுகிறது.

நம்மைத் தேடி இந்த நாட்களில் அரூபமாக வரும் முன்னோர்கள், நாம் அவர்களை வணங்குவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்ள். அதனால இந்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க. அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் தான்.

இதையும் வாசிக்கலாமே...

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

x