உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467ஆவது ஆண்டு கந்தூரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்திறங்கிய காட்சி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நாகூர் தர்காவின் கந்தூரி விழா கடந்த டிச.15ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று முன் தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவில் பங்கேற்று அங்கு வழிபாடு செய்தார். இந்த நிலையில் நேற்று இரவு கந்தூரி விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான், எளிமையான முறையில் ஆட்டோவில் வந்திறங்கியது அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்டோவில் வந்திறங்கிய ரஹ்மான், தர்காவுக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.