சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அங்கு விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்டமிட்டு அதற்கான நிலஎடுப்பு உள்ளிட்ட பணிகளையும் தொடங்கியுள்ளது.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது. சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மத்திய விமான போக்குவரத்துத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மாநில அரசு விமான நிலையம் அமையவுள்ள 2,570 ஏக்கருக்கான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், “சபரிமலை விமான நிலையத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. வனத்துறையின் ஆய்வுக்கு உட்பட்ட இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கின்றன. நிலம் வைத்திருப்பவர்களின் தகவல்களும் முழுமையாக ஆராயப்படும் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஒருசில ஆண்டுகளில் விமான நிலையம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே... இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
எரிவாயு சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!