[X] Close

வார ராசிபலன் அக்டோபர் 18 முதல் 24-ஆம் தேதி வரை (மேஷம் முதல் கன்னி வரை)


vaara-rasi-palan

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 09:12 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 10-ல் சஞ்சாரம் செய்கிறார். செவ்வாய் - புதன் - சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார்கள். தடங்கல் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சகோதரர்களுடன்  மனவருத்தம் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழக வேண்டும். பெண்களுக்கு, கருத்து வேற்றுமை நீங்கும். கலைத் துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமையன்று துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

***********************

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பிரச்சினையைக் கண்டு பயப்படமாட்டீர்கள். கோபமான பேச்சு, பதற்றம் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்களால் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். உத்தியோகத்தில் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள்  சங்கடங்கள் தீரும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டுமென்ற உறுதி காணப்படும். கலைத் துறையினருக்கு, தாமதமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 1, 6

பரிகாரம்:  நவகிரகத்தில் சுக்கிரனைப் பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

********************************

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும். திடீர் கோபம் வந்தாலும் சமாளிக்க முடியும். எடுத்த காரியம் முடியாத படபடப்பு இருக்கும். வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் காணப்படும். உத்தியோகத்தில், மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்கலாம்.

குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பொருட்களைக் கவனமாக பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு, எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். கலைத்  துறையினருக்கு எல்லா வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எந்த வேலையையும் எளிதாகச் செய்யமுடியும். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு காரியத் தடை, தாமதம் உண்டாகலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்: பெருமாளை வணங்கினால் எல்லா பிரச்சினைகளும் தீரும்.

*********************************************

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் ஏற்படும். பணத்தேவை ஏற்படும்; திறமையாகச் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போராட்டமும் முன்னேற்றமும் இருக்கும். உத்தியோகத்தில் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும்.

ஆனால் நல்ல பலனை தரும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, அனைத்துவிதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு,  கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். கவனம் அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையைத் தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தைத் தரும்.

***********************************

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் தைரியவீர்ய ஸ்தானத்துக்கு மாறுகிறார். குருவின் இருப்பு சுகஸ்தானத்தில் இருப்பதால் செலவு ஏற்பட்டாலும் அதைச் சமாளிபதற்கான வரவும் இருக்கும். பயணங்களால் களைப்பும் அதிருப்தியும் உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான சமயத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம்.

கடன் விவகாரங்களில் கவனமாகச் செயல்பட வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காகக் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு, மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு, இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு,  வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: அருணாசலேஸ்வரரை வணங்கி வரத் துன்பங்கள் விலகும்.

*********************************************

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைத் திறமையாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு, அனைத்தும் சீரான நிலையில் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். போட்டிகளில் வெற்றியும் பாராட்டும் கிடைக்கலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்:  லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close