[X] Close

குபேரனுக்கு அருளிய நிதீஸ்வரர் கோயிலில் நவராத்திரிப் பெருவிழா!


nidheeswarar-navarathiri

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Oct, 2018 13:00 pm
  • அ+ அ-

முன்னூர் ரமேஷ்

ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்த வண்ணம் காத்து ரட்சிக்கும் அன்னையாகிய ஆதிசக்தி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவள். இந்த ஆதி சக்தியே கல்வியை அருளும் கலைவாணியாகவும், செல்வத்தை அருளும் மஹா லக்ஷ்மியாகவும் வீரத்தை அருளும் காளிமாதேவியாகவும் முப்பெரும் தேவியராகவும் அருள்பாலிக்கின்றனர்.

 ஒரு சமயம், தேவர்களுக்கும் மகாரிஷிகளுக்கும் இன்னல்கள் இழைத்த கொடியவர்களை வதம் செய்ய அம்பிகை "சண்டிகா தேவியாக" அவதரித்து அவர்களை அழித்து இப்பூவுலகம் காத்து ரட்சித்தாள். அகிலம் காத்த அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக விழா எடுப்பதே நவராத்திரித் திருநாள். இந்த விழா "துர்கா பூஜை" என வடமாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது.

புரட்டாசி மாதம் "மஹாளய அமாவாசைக்கு"  அடுத்தநாள் தொடங்கி ஒன்பது நாள் வரையில் "நவராத்திரி விழாவாக" அன்பர்கள் தங்களது இல்லங்களில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

 பத்தாவது நாள் "விஜயதசமி" நாளோடு இந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

தமிழகத்தின் புராதனமான பல திருக்கோயில்களிலும் இந்த நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகி றது. இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோலத்தில் அம்பிகை விசேஷ அலங்காரத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சி.

 அந்த வகையில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள அன்னம்புத்தூர் எனும் புராதனமான தலத்தில் அருளும் "ஸ்ரீகனக திரிபுரசுந்தரி அம்பிகை சமேத ஸ்ரீநிதீஸ்வரர்" ஆலயத்தில் நவராத்திரிப்  பெருவிழா மற்றும் மஹா சண்டிஹோமம் 10.10.2018 முதல் 19.10.2018 வரை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின் றது.

 16.10.2018 அன்று விக்னங்கள் தகர்க்கும் விக்னேஷ்வர பூஜை மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கும் "மஹாசண்டி ஹோம பூஜை" 17.10.2018 அன்று மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

 19.10.2018 விஜயதசமியன்று மாலை 6.30 மணியளவில் ஶ்ரீமகிஷாசுரமா்த் தினி அசுரனை வதைக்கும் "அம்பு எறிதல்" உற்ஸவம் நடைபெறுகி றது.

 நான்முகனுக்கு அருளிய ஈசன்!

அடி முடி காணா அண்ணாமலையில் ஈசனின் முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார் பிரம்மதேவன்.பொய்யுரை புனைந்ததால் உலக உயிர்களை நான்முகனால் சிருஷ்டிக்க இயலவில்லை. மனம் வருந்திய நான்முகன் தனக்கு ஏற்பட்ட இழுக்கு தீர திருக்கயிலை நாதனின் திருத்தாள் பணிவதே சிறந்த வழி என்பதை உணர்ந்து தனது திருக்கரங்களால் ஈசனை பிரதிஷ்டை செய்து இழந்த தகுதியை மீண்டும் பெற பல நாட்கள் தவமியற்றினார்.

 ஈசனின் நித்ய பூஜைகளுக்காக பிரம்மதீர்த்தத்தை அமைத்து பரமனுக்கு உள்ளம் குளிர அபிஷேகம் செய்வித்தார். ஆலகாலவிஷம் உண்டு அகிலம் காத்த அண்ணல், அன்னவாகன னான பிரம்மதேவனின் பக்திக்கும் மனமிரங்கி அவருக்கு ஏற்பட்ட இழுக்கு தீர அருள்புரிந்தார்.

"அன்னவாகனன்",  "அன்னமூர்த்தி" எனும் திருநாமங்களில் பூஜிக்கப்படும் பிரம்மதேவன் ஈசன் அருள் பெற தவமிருந்த இத்தலம் அன்று முதல் "அன்னம்புத்தூர்" என்று பக்தியோடு பூஜிக்கப்படுகின்றது.

 பதுமநிதி, மகாபதுமநிதி, மகாநிதி,கச்சபநிதி, முகுந்தநிதி, குந்தநிதி, நீலநிதி மற்றும் சங்கநிதி போன்ற எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களின் தலைவன் என்பதால் குபேரனுக்கு "நிதிபதி" என்ற திருநாமமும் உண்டு.நீங்காத செல்வம் என்றும் நிலை பெற குபேரன் அன்னம்புத்தூர் ஈசனை வணங்கி இப் பேறினைப் பெற்றதால் ஈசனுக்கு"ஸ்ரீநிதீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளதை கோயிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

 திண்டிவனம் அருகில், திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் தென் பசியார் என்னும் ஊரிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர்.

 மிகச் சிறந்த பரிகாரத் தலமான அன்னம்புத்தூர் கனகதிரிபுர சுந்தரி சமேத நிதீஸ்வரப் பெருமானின் ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிலும் மஹாசண்டி ஹோமத்திலும் கலந்து கொண்டால் வறுமை நீங்கி நம் வாழ்வில் வளம் பெருகும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close