சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் மனமுருக வழிபாடு... பலத்த போலீஸ் பாதுகாப்பு!


சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மனமுருக வழிபாடு நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் பயணித்து வருகிறார். இன்று மாலை சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில்

இதையொட்டி நேற்று இரவு அவர் சேலம் வந்தார். இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிலையில் சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர், உற்சவர் மற்றும் சொர்ணாம்பிகை தாயார் மற்றும் கோயில் பிரகாரத்தில் உள்ள இஷ்ட தெய்வங்களையும் அவர் தனித்தனியே வணங்கினார். துர்கா ஸ்டாலினின் வருகையை ஒட்டி கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

x