பங்குனி உத்திரம்... மக்கள் வெள்ளத்தில் மயிலம் முருகன் கோயில் தேரோட்டம்!


மயிலம் முருகன்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள வள்ளிதெய்வானை சமேத முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மயிலம் முருகன் கோயிலில் தேரோட்டம்

மயிலம் பகுதியில் மயில் போன்ற வடிவில் அமைந்துள்ள மலையில் பிரசித்திபெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 15-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மயிலம் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கண்க்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மயிலம் முருகன் கோயிலில் தேரோட்டம்

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசித்தனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 26-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

x