[X] Close

நவராத்திரி பிரசாதங்கள்..!


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Oct, 2018 12:41 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

   சக்தி தேவியை, முதல்நாளில் ஸ்ரீசாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். அதாவது,  முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா என அழைக்கப்படுகிறாள். இவள் மிகவும் கோபக்காரி. ஆனால் என்ன... நீதியைக்  காக்கவும் சத்தியத்தை நிலை நிறுத்தவும் கோபப்படுகிறாள்.

  முதல்நாள் நைவேத்தியமாக -சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவேண்டும்.

  நவராத்திரியின் இரண்டாம் நாளில், அம்பிகையை எப்படி வழிபடவேண்டும் தெரியுமா? -

  இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ள துர்தேவதைகள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். எதிர்ப்புகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

  வராஹ (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் அவளுடைய ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப் பற்களால் பூமியைத் தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி முதலான திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

இரண்டாம் நாள் நைவேத்தியமாக - தயிர்சாதம் படைத்து வழிபடுவது பல நன்மைகளை வாரி வழங்கும்.

  நலம் தரும் நவராத்திரியின் மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக நினைத்து வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பார்கள்.

   இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஆயிரம் கண்ணுடையவள். யானையை வாகனமாகக் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளே!     

   பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்கள், இழந்த பதவி மற்றும் பொருட்களை அடையக் காத்திருப்பவர்கள், இவளை மனதார வேண்டிக் கொண்டால் போதும். இவளின் அருட்பார்வை கிடைத்துவிடும். 

  மூன்றாம் நாள் நைவேத்தியமாக  வெண்பொங்கல் படைத்து வழிபடுவது விசேஷம். இதனால், நம் வாழ்வில் இன்பம் பொங்கும். அமைதி தவழும்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close