[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 09:26 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு அவதிப்படாதீர்கள். உறவினர், நண்பர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.. 

விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். 

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம் பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close