புனித சவேரியார் பேராலய பெருவிழா தேரோட்டம்... டிசம்பர் 4-ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள கோட்டாறு சவேரியார் ஆலயத்தின் தேர்பவனியை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புனித சவேரியார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தார். அவர் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அவர் தங்கி வாழ்ந்தது கன்னியாகுமரி மாவட்டம். கோட்டாரில் கி.பி. 1542 முதல் 1552 வரை உள்ள காலகட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் பணியாற்றினார். 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இங்கேயே இயற்கை எய்தினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தேவாலயம் பின்னர், பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது.

சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் இந்த புனித சவேரியார் பேராலய பெருவிழா ஆண்டு தோறும் நவம்பர் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24-ம் தேதி கொடியற்றதுடன் திருவிழா தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், மலையாள திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 4-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். அதனால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், அன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

x