பங்குனி உத்திர திருவிழாவுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் வரும் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் வரும் 16-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு, அன்றைய தினம் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்ற விழா நடைபெறும். காலை 8.30-க்கும் 9 மணிக்கும் இடையே திருவிழா கொடி ஏற்றப்படும்.
திருவிழாவின் 9ம் நாளான 24ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 25ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடையும். இதைத்தொடர்ந்து வரும் 25ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜைகளும், பங்குனி உத்திர திருவிழாவும் சேர்ந்து வருவதால், இந்த மாதத்தில் தொடர்ந்து 12 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும்.
எனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலைக்கு வர sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுவதை ஒட்டி, தற்போதிருந்தே பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!
மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!
சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?
திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!