சிவன் மீது அபூர்வமாய் பட்ட சூரிய ஒளி... பக்தர்கள் பரவசம்!


அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்.

அந்த வகையில் இந்த அரிய நிகழ்வு இன்று காலை சூரிய உதயத்தின் போது நடைபெற்றது. பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி செங்கதிராக, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து வணங்கியது. அப்போது செந்நிறமாக அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6.45 மணிக்கு தொடங்கி, 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இந்த அரிய நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

x