ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபடலாம்; மசூதி தரப்பின் மனு தள்ளுபடி - அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!


ஞானவாபி மசூதி - காசி கோயில்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்ய வாராணசி மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதியை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகிலேயே ஞானவாபி மசூதி உள்ளது. 17-ம் நுாற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கோயிலை இடித்துவிட்டு அதன்மீது மசூதி கட்டியதாகவும் மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

வாராணசியில் ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றின் அமைவிடம்

நீதிமன்ற உத்தரவின் பேரில் தொல்லியல் துறை ஆய்வு செய்து மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உட்பட இந்து கடவுளர் உருவங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் பூஜை செய்யவும் கடந்த மாதம் வாராணசி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்

இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், இந்துக்கள் தொடர்ந்து மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த அனுமதி அளித்து, மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...
மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும்... கனிமொழி எம்.பி., பேச்சு!

24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... நடிகைக்கு பரிசாக வழங்கிய பிரபல பாடகர்!

x