பழநி மலைக்கோயில் ரோப் கார் நாளையும், நாளை மறுநாளும் (பிப்ரவரி 20,21) இயங்காது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான இக்கோயில், புகழ்பெற்ற ஆன்மில தலமாக திகழ்கிறது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இக்கோயிலுக்கு வருகின்றனர். இந்த மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக படி வழியாக பாதை, வின்ச், ரோப் கார் என மூன்று வழிகளில் செல்கின்றனர்.
இதில் ரோப் கார் மூலம் இரண்டு நிமிடங்களில் மலையைச் சென்று விடலாம். இதனால் பக்தர்கள், ரோப் கார் மூலம் மலைக்குச் செல்ல விரும்புகின்றனர்.

இந்த ரோப் கார் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ரோப் கார்களில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!
அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?... விமான நிலையத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!