[X] Close
 

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 09:14 am
  • அ+ அ-

மேஷம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்களின் உயர்கல்வி விஷயத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம்: உறவினர்கள் மத்தியில் புகழ், கவுரவம் உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

மிதுனம்:  நல்ல காற்றோட்டம் உள்ள புது வீட்டுக்கு மாறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல் வர வாய்ப்பிருக்கிறது. 

கடகம்: தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளை துணிவுடன் எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.

சிம்மம்: இழுபறியாக இருந்த சில காரியங்களெல்லாம் திடீரென முடிவடையும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்து மனக் கசப்புகள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி: முன்கோபம் அதிகமாகும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமோ என்ற ஆதங்கம் இருக்கும். மாலை முதல் நிம்மதி கிடைக்கும். 

துலாம்: திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள். 

விருச்சிகம்:  பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். விருந்தினர் வருகை உண்டு

தனுசு: தந்தைவழியில் வரவேண்டிய தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். புது வேலை கிடைக்கும். 

மகரம்: எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.  திடீர் பயணம் ஏற்படலாம்.

மீனம்: முயற்சிகள் கைகூடும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.  முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close