காளையார்கோவிலில் சோமேஸ்வரர் கோயில் வைகாசி தேரோட்டம்


காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயில் வைகாசி தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

சிவகங்கை: காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராத னைகள் நடைபெற்றன. தினமும் இரவு சுவாமி - அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். மே 17-ம் தேதி திருக்கல்யாணம் நடை பெற்றது. தேரோட்டத்தை யொட்டி, நேற்று அதிகாலை பிரியாவிடையுடன் சுவாமி பெரிய தேரிலும், அம்மன் சின்னத் தேரிலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து, காலை 11 மணிக்கு சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து பிற்பகல் 12.20 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு தெப்பத் திருவிழா நடை பெறுகிறது.