திருவண்ணாமலையில் ஆக.19-ல் பவுர்ணமி கிரிவலம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 19-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மலையே மகேசன்' என போற்றப்படும் திருவண்ணா மலையில் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணா மலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பாகும்.

இதனால், 14 கி.மீ., தொலைவுள்ள திரு அண்ணாமலையை லட்சக்கணக்கான பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.

அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி வரும் 19-ம் தேதி அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி அன்றைய தினம் நள்ளிரவு 1.02 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்துக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

x