அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. அப்போது ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை பூஜையைச் செய்த 22 வயது அர்ச்சகர் மோஹித் பாண்டே யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார்.

கருவறை அருகே உள்ளே வந்த மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அமர்ந்தார். மோடி சங்கல்பம் செய்து கொண்டார். சரியாக 12.20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைந்த மோடி மற்றும் மோகன் பகவத் இருவரும் குழந்தை ராமர் சிலையின் எதிர்புறம் அமர்ந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரான பிரதிஷ்டை செய்யும் பூஜை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பூஜையை செய்தவர் 22 வயதான அர்ச்சகர் மோஹித் பாண்டே.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்தவர் மோஹித் பாண்டே(22). காசியாபாத்தில் உள்ள பழைமை வாய்ந்த துதேஷ்வர் மடத்தின் வளாகத்தில் அமைந்துள்ள வேத வித்யா பீடத்தின் மாணவராவார். இங்கு 7 ஆணடுகள் வேதம் கற்ற மோஹித் பாண்டே, திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரர் வேத பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றுள்ளார்.
இந்தியா முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலிலல் அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை செய்யும் அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்டவர் தான் இந்த மோஹித் பாண்டே. இதற்காக இவர் கடந்த 6 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... பக்தி பரவசமூட்டும் புகைப்படத்தொகுப்பு!
பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!