‘ரொம்ப மகிழ்ச்சி'... ராமர் கோயிலுக்குப் புறப்பட்டார் ரஜினிகாந்த்; பரபரப்பு பேட்டி!


அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

அயோத்தி ராமர் கோயில்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதுமிருந்து அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தலைவர்கள், அதிகாரிகள் ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார்.

விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், "ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என தெரிவித்தார். இதேபோல் நடிகர் தனுஷும் அயோத்தி புறப்பட்டுச் சென்றுள்ளார். அயோத்தி கோயில் கும்பாபிஷேக விழா நெருங்கியுள்ள நிலையில் முக்கிய விருந்தினர்கள் அயோத்திக்கு புறப்பட்டு வருகின்றனர்.

x