ராமர் கோயில் விழா; அயோத்தியில் அறுசுவை விருந்து... அத்தனை செலவும் பிரபாஸ்தான்!


நடிகர் பிரபாஸ்

அயோத்தி ராமர் கோயிலில் 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெற உள்ள அறுசுவை விருந்தின் செலவுகள் முழுவதையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமர் கோயில்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மைசூரு சிற்பி தயாரித்த குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு நேற்று கருவறையில் நிறுவப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள மாபெரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி பாலிவுட்டில், அலியா பட், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஹேமமாலினி உள்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் அனுமதி கிடையாது என்றாலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் அயோத்திக்கு வர உள்ளனர்.

இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவின்போது, முதல் நாளில் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் ஏராளமான திரை மற்றும் அரசியல் நட்சத்திரங்கள், வௌிநாட்டு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என சுமார் 8000 பேர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுக்கான விருந்து செலவு 50 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x