அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 22-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் அங்குலம் அங்குலமாக போலீஸார் சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த மூன்றுபேரை உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்புப் படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது அயோத்தி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் டிரோன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி வாகனங்களில் ரோந்தும் சென்று வருகின்றனர். இப்படி உச்சகட்ட பாதுகாப்புகள் இருக்கும் அயோத்தியில் மக்கள் மற்றும் பொருட்களின் சிறு நடமாட்டத்தையும் போலீஸார் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அயோத்தியில் சந்தேகப்படும் படியாக அந்த மூன்று பேரும் வெவ்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்குரிய வகையில் மூன்று பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளது அயோத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!
கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை... வெளியானது முதல் புகைப்படம்!
சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை... அமலாக்கத் துறையும் அதிரடி!