பழனி தைப்பூச திருவிழா... கொடியேற்றத்துடன் தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!


பழனி கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி கொடியேற்றம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் ஜனவரி 24ம்தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், ஜனவரி 25ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்று முதல் தினமும் அருள்மிகு முகத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் மாரிமுத்து உட்படப் பலர் கலந்து கொண்டனர். தைப்பூச விழாவினைத் தொடர்ந்து வரும் ஜனவரி 28ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருக்கோவில் நிர்வாகம், பழனி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பழனி கொடியேற்றம்

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு 600க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பல்வேறு இடங்களில் தங்குமிடம், மின்சாரம், குடிநீர், கழிவறை, மருத்துவம், உள்ளிட்ட வசதிகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x