ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டார் பிரதமர் மோடி!


ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார் பிரதமர்.

அயோத்தி ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளையும், ராமருக்கு அர்பணித்து உலக நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

அயோத்தி ராமர் கோயில், மங்கள் பவன் அமங்கல் ஹரி, பிரகாசிக்கும் சூரியன், புனித சரயு நதி, கோயிலில் காணப்படும் சிற்பங்கள் உள்ளிட்ட 6 தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆறு தபால் தலைகள் ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்கிறது. விநாயகர், ஹனுமன், ஜடாயு, கெவத்ராஜ், மா ஷாப்ரி ஆகிய அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும், பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நிலம், நீர் ஆகியவற்றின் அம்சங்களையும் இந்த அஞ்சல் தலைகள் கொண்டுள்ளன.

ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகள்.

இந்து தத்துவத்தில் உள்ள அனைத்து உருவாக்கத்துக்கும் இன்றியமையாதவையான பஞ்சபூதங்களின் சரியான நல்லிணக்கத்தை இந்த அஞ்சல் தலைகள் அடையாளப்படுத்துகின்றன.

அஞ்சல் தலைகள் வெளியீட்டுடன், உலக நாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகள் கொண்ட 48 பக்க புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

ராமர் கோயில் அஞ்சல் தலைகளுடன் பிரதமர் மோடி.

இது ராமரின் சர்வதேச தாக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் வெளியிட்ட அஞ்சல் தலைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகள் வெளியிட்ட ராமர் கோயில் அஞ்சல் தலை தொகுப்பு புத்தகத்தை பார்வையிடும் பிரதமர்.

இந்த தொகுப்பானது, உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் ராமரின் மகத்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

x