அயோத்தி கோயிலை இன்று வலம் வரும் பாலகர் ராமர் சிலை!


ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பஞ்சகவியப்பிரஷான் பூஜை.

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள பாலகர் ராமர் சிலை, இன்று கோயிலை வலம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் ஒரு வாரகால பூஜை நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று மூலவர் ராமர் சிலை கோயிலைச் சுற்றி வலம் வர உள்ளதாக கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில்.

இதுதொடர்பாக பூஜைகளை மேற்பார்வையிட்டு வரும் வேத பண்டிதர் ஆச்சார்ய ஸ்ரீ கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் வெளியிட்டுள்ள தகவலில், “அயோத்தியில் ஒரு வார கால 'பிராண் பிரதிஷ்டா' விழாவின் இரண்டாவது நாளான இன்று, ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயில் வளாகத்தில் பாலகர் ராமர் சிலை வலம் வர உள்ளது" என கூறியுள்ளார்.

மேலும், கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலில், “ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயிலில் நேற்று, விஷ்ணுவை வழிபட்ட பிறகு பஞ்சகவியத்துடன் (பால், கோமியம், சாணம், நெய் மற்றும் தயிர்) பஞ்சகவியப்பிரஷான் செய்யப்பட்டது.

வேத பண்டிதர் ஆச்சார்ய ஸ்ரீ கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்.

ஜன.22-ம் தேதி சிலை பிரதிஷ்டா மகோத்சவத்தின் ஒரு பகுதியாக அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், அனில் மிஸ்ரா அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பரிகாரம் செய்து சரயு ஆற்றில் நீராடினார். விஷ்ணுவை வழிபட்ட பிறகு, அவர் பஞ்சகவ்யா மற்றும் நெய் சமர்ப்பணம் செய்து பஞ்சகவ்யாப்பிரஷான் செய்தார்.

துவாத்ஷாப்த் பக்ஷாவின் பிராய்ச்சித்தத்தின் ஒரு பகுதியாக பசு தானம் செய்யப்பட்டது. தஷ்தானுக்குப் பிறகு சிலை உருவாக்க இடத்தில் கர்மக்குடி ஹோமம் செய்யப்பட்டது. 'ஹவான்' நிகழ்வின்போது, ஆச்சார்யா வேதப்பிரவர் ஸ்ரீ லட்சுமிகாந்த் தீட்சிதர் உடனிருந்தார். வால்மீகி ராமாயணம், பசுந்துரமயணா ஓதுதல் தொடங்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x