ஸ்ரீராமருடனான தங்கள் பக்திபூர்வமான அனுபவங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுமாறு ராமர் கோயில் அறங்காவலர்கள் வைத்த கோரிக்கைக்கு, உலகெங்கிலும் இருந்து ராம பக்தர்கள் தீவிரமாக வினையாற்றி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவே, இன்னும் சில தினங்களுக்கு இந்தியாவின் டிரெண்டிங்கில் முதன்மை வகிக்கப்போகிறது. அந்தளவுக்கு திசையெங்கும் ராமர் கோயில் தொடர்பான விவாதங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு பக்திபூர்வமான பிரார்த்தனைகள், வழிபாடுகளும் களைகட்டி வருகின்றன.
இவற்றையொட்டி அயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழு, இன்று சமூக ஊடக வலைதளத்தில் ஒரு கோரிக்கை முன்வைத்தது. அதில், ராமபிரான் மற்றும் ராமர் கோயில் தொடர்பான பக்திபூர்வ அனுபவங்களை வீடியோவாக சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டது.
”5 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீராமர் தனக்கான வசிப்பிடத்திற்குத் திரும்பியது, இந்த பிரபஞ்சத்தை ஈடு இணையற்ற உணர்ச்சிகளால் நிரப்புகிறது. அவரது வரவேற்பின் மகத்துவத்தை அதிகரிக்க, உலகெங்கிலும் உள்ள ஸ்ரீராமபக்தர்கள், இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த கோரிக்கை நீள்கிறது.
இதனையடுத்து உலகமெங்கிலும் இருந்து ராம பக்தர்கள் தங்களது வீடியோக்களை #ShriRamHomecoming என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு வருகின்றனர். ராம பஜன், வழிபாடு, தரிசனம், சொந்த அனுபவம், குழந்தைகள் நடனம் என பல வகையிலும் அந்த வீடியோக்கள் டிரெண்டிங்கில் இடம்பெற்றிருக்கின்றன.
’ராமர் கோயில் குடமுழுக்கு விழா பாஜகவின் அரசியல் திட்டமாகும்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்ப்பது போல, ஸ்ரீராமர் போர்வையில் மோடியின் புகழ்பாடும் வீடியோக்களும், இந்த டிரெண்டிங்கில் முன்னேறி வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று காத்திருந்த பக்தர்கள் மத்தியில் ஜன.22 குடமுழுக்கு வைபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகி உள்ளது. பிரபலங்கள், சாதுக்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பங்கேற்கும் ராமர் கோயில் குடமுழுக்கை அடுத்து, பக்தர்கள் வருகையை அயோத்தி ராமர் கோயில் அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மாதம் ரூ.71,900 சம்பளம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
அதிர்ச்சி... டாஸ்மாக் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், மதுபாட்டில்கள் கொள்ளை!
பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்த ராமர் கோயில் அகழாய்வில் கண்டுபிடிப்பு! பக்தர்கள் பரவசம்!
அதிர்ச்சி...ஓடுபாதையில் உணவருந்திய பயணிகள்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்!