12 அடி உயரம்... 8 அடி அகலம்... அயோத்தி ராமர் கோயிலில் 42 கதவுகள் தங்கத்தில் பொருத்தம்!


ராமர் கோயிலுக்கு தங்கத்தில் கதவுகள்.

அயோத்தியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில், தங்கத்தால் செய்யப்பட்ட 42 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோயில்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு வரும் ஜனவரி 22ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி முன்னிலையில் கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தங்கத்தில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் சுமார் 12 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்டது. அடுத்த மூன்று நாட்களில் இதேபோல் மேலும் 13 கதவுகள் பொருத்தப்பட உள்ளன.

இது குறித்து கோயில் நிர்வாக தரப்பில் கூறுகையில், "இந்த கதவுகள் கருவறையின் மேல் மாடியில் நிறுவப்பட்டுள்ளன. ராமர் கோயிலில் மொத்தம் 46 கதவுகள் பொருத்தப்படும். அவற்றில் 42 கதவுகளில் 100 கிலோ தங்க முலாம் பூசப்படும்” என்றனர்.

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை, 'தேசிய திருவிழா' என அறிவித்துள்ள உத்தரப் பிரதேச அரசு, இந்த நிகழ்வை முன்னிட்டு, அரசு கட்டிடங்களை அலங்கரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் பயணமாக அயோத்தி சென்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ”அயோத்தி தூய்மை மற்றும் அழகான நகரமாக காட்சியளிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

x